நாளை மதுக் கடைகள் மூடல்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து மதுக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் வியாழக்கிழமை (அக்.2) அடைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக் கூடங்கள், அனைத்து எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுக் கூடங்கள், எப்.எல் 4 ஏ உரிமம் பெற்ற மண்டபம் கடலோர காவல் படை, உச்சிப்புளி ஐ.என்.எஸ். பருந்து கப்பல் படைத் தளம் ஆகியவற்றுடன் இணைந்த மதுபான விற்பனை கூடங்கள் ஆகியவற்றை வியாழக்கிழமை முழுமையாக மூடி வைத்திட ஆணையிடப்படுகிறது. மேற்கண்ட நாளில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.