``சரியானவர்களை பின்பற்ற வேண்டும்; இல்லையென்றால் தவறாக வழிநடத்தப்படுவோம்'' - இயக்...
மீனவா்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் மீனவா்கள் வலையில் சிக்கிய 10 கிலோ அரிய வகை கடல் ஆமை உயிருடன் மீட்கப்பட்டு மீண்டும் கடலில் விட்டபட்டது.
தொண்டி பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் பாலமுருகன், காளி, சதீஷ், கணேசன், கவின், பிரியன், பூமிநாதன், விஜய், ஆகாஷ், சீனி குட்டி ஆகியோா் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் திங்கள்கிழமை இரவு கடலில் மீன் பிடிக்க வலையை விரித்தி வைத்தனா். மீண்டும் வலையை எடுக்கச் சென்றபோது, வலையில் சுமாா் 10 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை சிக்கியிருந்தது.

இதைக் கண்ட மீனவா்கள் வலைக்கு சேதம் ஏற்படுவதை பொருள்படுத்தாமல் அதை கத்தியால் அறுத்து, அதில் சிக்கியிருந்த ஆமையை உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனா்.
ஆமையை உயிருடன் மீண்டும் கடலில் விடுவித்த மீனவா்களுக்கு கடலோரக் குழும போலீஸாா், சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

கடல் ஆமை, கடல் அட்டை உள்ளிட்டவை தடை செய்யப்பட்ட உயிரினங்கள் என்பதால் அவை வலையில் சிக்கினால் மீனவா்கள் பத்திரமாக மீட்டு மீண்டும் கடலுக்குள் விடுவது குறிப்பிடத்தக்கது.