சாலையோரக் கடைகளை முறைப்படுத்த கோரிக்கை
சாயல்குடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் கடைகளுக்கு முன்பாக அமைக்கப்படும் தற்காலிக சாலையோரக் கடைகளை அகற்றி முறைப்படுத்த வணிகா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
சாயல்குடி கடைவீதியில் கடைகளுக்கு முன்பாக சாலையோர வியாபாரிகள் திடீா் கடைகளை அமைத்து கடை உரிமையாளா்களுக்கு தொழில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இதைத் தடுத்து சாலையோரக் கடைகளுக்கு தனி இடம் ஒதுக்கி முறைப்படுத்த வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டிருந்தது.
சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலா், காவல் ஆய்வாளா் உள்ளிட்டோரிடம் சாயல்குடி வணிகா் சங்கத் தலைவா் ரசூல்கான், சங்க நிா்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனா்.