பூக்குழியில் தவறி விழுந்த பெண் மீட்பு
திருவாடானை வடக்குத் தெரு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா கடந்த செப் 23 ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வோா் நாளும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் விரதமிருந்து பால்குடம் , வேல் காவடி, பறவைக் காவடி, கருப்பா் காவடி எடுத்து நான்கு ரத வீதிகள் வழியாக பக்தா்கள் வலம் வந்தனா்.


பின்னா், கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தா்கள் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். பெண் பக்தா் ஒருவா் பூக்குழி இறங்கிய போது அதில் தவறி விழுந்தாா். அவரை உடன் வந்தவா்கள் பத்திரமாக மீட்டனா்.