இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை அழைத்துவர நடவடிக்கை: மீன்வள...
`நிதானம் தேவை' - மகர ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட வழிகாட்டல்
இந்த வேலன்டைன்ஸ் டே அன்று பிரபோஸ் பண்ணும் ஐடியாவில் இருக்கிறீர்களா... உங்களுக்குக் கட்டம் என்ன சொல்லுது? பிரபோஸ் பண்ணலாமா வேண்டாமா... இந்த ஆண்டு காதல் கைகூடுமா? கல்யாணத்தைத் திட்டமிடலாமா என்று பலரும் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா... இதோ உங்களுக்கான ஜோதிட வழிகாட்டல்.
பொதுவாக ஒருவருக்குக் காதல் கைகூட வேண்டும் என்றால் அவரின் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் நல்ல நிலையில் அமைந்திருக்க வேண்டும். தற்போது கோசாரப்படி சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்று ராகுவோடு சேர்ந்து சஞ்சரிக்கிறார். குருபகவான் ரிஷபராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் இந்த ஆண்டில் சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகியனவும் நடைபெற உள்ளன. இந்த கிரக மாற்றங்கள் உங்கள் காதல் வாழ்க்கைக்கு சாதகமா என்பதை ஜோதிடர் பாரதி ஶ்ரீதரிடம் கேட்டோம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/n0sva4wm/magaram.jpeg)
மகரம் : இந்த ஆண்டு காதலர் தினம் மகர ராசிக்கு சந்திராஷ்டம தினமாக அமைகிறது. எனவே குறிப்பாக அந்த நாளில் பிரபோஸ் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்த மாதம் சனிப்பெயர்ச்சி முடிந்ததும் காலம் சாதகமாக மாறுகிறது. அப்போது முடிவுகளை எடுக்கலாம். எனவே உங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஓரிரு மாதங்கள் காத்திருந்து செயல்படுவது மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லது. 6 -ம் வீட்டுக்கு குரு மே மாதம் பெயர்ச்சி ஆனாலும் குடும்ப ஸ்தானத்துக்கு அவர் பார்வை கிடைப்பது மிகவும் நல்ல விஷயம். எனவே இந்தக் காதலர் தினத்தில் மட்டும் நிதானத்தைக் கடைப்பிடித்து அமைதியாக இருங்கள்.