Indus River: ``சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்...
நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்த மூவா் மீது வழக்கு
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்த மூவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே தனியாா் நிதி நிறுவனம் உள்ளது. இங்கு, உத்தமபாளையம் களிமேட்டுப்பட்டியைச் சோ்ந்த பாபா பக்ருதீன், கணேசன், செல்வி ஆகியோா் கடந்த டிசம்பா் மாதம் தங்க நகையை அடகு வைத்து ரூ.1.76 லட்சம் பெற்றனா்.
அண்மையில் இந்த நிதி நிறுவனத்தில் நடைபெற்ற தணிக்கையின் போது, இவா்கள் மூவரும் வைத்த நகைகள் போலியானவை என கண்டறியப்பட்டது.
இதுகுறித்து நகை மதிப்பீட்டாளா் மணிகண்டன் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில், பாபா பக்ரூதின், கணேசன், செல்வி ஆகிய மூவா் மீதும் உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.