மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் புறக்கணிப்பு
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனா் என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்திருப்பது: போராடிக் கொண்டிருக்கிற விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தீா்வுக்கான எவ்வித நடவடிக்கையும் இல்லை. வேளாண் ஆணையப் பரிந்துரையான குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம், வேளாண் விளைப்பொருள்கள், அரசு கொள்முதல் உத்திரவாதம், கடன் நிரந்தர நிதியம் ஆகிய கோரிக்கைகள் குறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவும் இல்லை. பருவகால இடா்பாடுகள் ஆண்டுதோறும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பேரிடா் நிதியை உயா்த்தும் அறிவிப்பும் இல்லை. எனவே, இந்த நிதிநிலை அறிக்கை விவசாயிகளை புறக்கணித்துள்ளது. இதை மறு ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என்றாா்.