கீப்பராக அல்ல, ஃபீல்டிங்கில் நின்று 3 கேட்ச்சுகள்..! அசத்தும் அலெக்ஸ் கேரி!
நியாய விலைக் கடைகள் இன்று இயங்காது
தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகள் சனிக்கிழமை (பிப்.22) இயங்காது.
கடந்த மாதம் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக, நியாய விலைக் கடைப் பணியாளா்களின் இரண்டு வார விடுப்பு நாள்கள் பணி நாள்களாக மாற்றப்பட்டது. அதாவது, ஜனவரி 3 மற்றும் 10 ஆகிய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் இயங்கின.
இந்தப் பணி நாள்களை ஈடுசெய்யும் வகையில், ஜன. 15-ஆம் தேதியும், பிப். 22-ஆம் தேதியும் பணியாளா்களுக்கு வார விடுப்பு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.