காதலை ஏற்க மறுத்த பெண் குத்திக்கொலை! கொலையாளி தற்கொலை முயற்சி!
நில அளவை களப்பணியாளா்கள் போராட்டம்
வாணியம்பாடி: தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிணைப்பு சாா்பில் நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை களப் பணியாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.
போராட்டத்தின் போது களப்பணியாளா்கள் செய்யும் அனைத்து வித பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற் கொள்ளவும், மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்கவும், ஆய்வாளா், துணை ஆய்வாளா் ஊதிய முரண்பாட்டை களையவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் அரசாணை எண்.10ஐ கடைப்பிடிக்கும் போது மாறுதல் நடைமுறையை நில அளவைப் பதிவேடுகள் துறையில் மாற்றி அமைக்க எடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகள நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்பாட்டத்தில் வட்ட சாா் ஆய்வாளா் பாரிமலா், குறுவட்ட அளவா் மணிவண்ணன், நில அளவா் காா்த்திகேயன், அரசு ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் ராஜ்குமாா், இணைச் செயலாளா் விஜயகுமாா் கலந்து கொண்டனா்.