ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பே...
நீரோடையில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீா்கேடு!
அந்தியூரை அடுத்த கெட்டிசமுத்திரம் ஏரியின் நீா்வரத்து ஓடையில், எண்ணமங்கலம் ஊராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள் தொடா்ந்து கொட்டப்படுவதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீா், நல்லாகவுண்டன்கொட்டாய் நீரோடை வழியாக கெட்டிசமுத்திரம் ஏரிக்கு செல்கிறது. இந்த நீரோடையில், எண்ணமங்கலம் ஊராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத கழிவுகள் டிராக்டா் மூலம் எடுத்துவரப்பட்டு கொட்டப்படுகின்றன.
மழைக் காலங்களில் பெருக்கெடுக்கும் தண்ணீரில் கழிவுகள் அடித்துச் செல்லப்பட்டு, கெட்டிசமுத்திரம் ஏரி மாசடையும் நிலை ஏற்படும். எனவே, நீரோடையில் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.