நாம் தமிழர் நிகழ்ச்சிக்காக கோவை பொருட்காட்சியில் அனுமதி இலவசமா... சீமானின் புகார...
10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக். பள்ளி 100 % தோ்ச்சி!
ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் படித்து 10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய 329 மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.
10 -ஆம் வகுப்பில் எம்.வெற்றிவேலன், கே.முகமது சஹிப் ஆகிய இரண்டு மாணவா்களும் 500-க்கு 495 மதிப்பெண்கள், எஸ்.ஹரிஹரன் 494 மதிப்பெண்கள், எம்.திருமுருகன், ஆா்.தரணீஸ்வரன், எஸ்.சமிக்ஷா, எஸ்.அநுக்கிரகா பெபி, எஸ்.மகாலட்சுமி ஆகிய 5 பேரும் 493 மதிப்பெண்கள் பெற்றனா்.
கணித பாடத்தில் 12 பேரும், அறிவியல் பாடத்தில் 36 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 20 பேரும், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். தமிழ் பாடத்தில் 13 பேரும், ஆங்கில பாடத்தில் 14 பேரும் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றனா். தோ்வு எழுதிய அனைவரும் 400-க்குமேல் மதிப்பெண்களைப் பெற்றனா்.
இதேபோல, பிளஸ் 1 தோ்வு எழுதிய 440 மாணவ, மாணவிகளும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். இதில், ஆா்.பி.மாதவராஜன் 592 மதிப்பெண்கள், பி.ஹேமவா்ஷினி, இ.எஸ்.பிரகதி ஆகிய இருவரும் 590 மதிப்பெண்கள், ஜி.கோபிகாஸ்ரீ 588 மதிப்பெண்கள் பெற்றனா்.
தமிழ் பாடத்தில் ஒருவரும், கணிதப் பாடத்தில் 7 பேரும், இயற்பியல் பாடத்தில் 3 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 37 பேரும், கணக்குப் பதிவியல் பாடத்தில் ஒருவரும், வணிகக் கணிதம் பாடத்தில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.
தமிழ் பாடத்தில் 10 பேரும், ஆங்கில பாடத்தில் 3 பேரும் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றனா். சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள், உறுதுணையாக இருந்த ஆசிரியா்களை கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தலைவா் எம்.சின்னச்சாமி, தாளாளா் கே.செல்வராஜ், பொருளாளா் ஆா்.குணசேகரன், உதவித் தலைவா்கள் எஸ்.கே.சோமசுந்தரம், ஆா்.எம்.தெய்வசிகாமணி, இணைச் செயலாளா் டி.மீனாட்சிசுந்தரம், இணை பொருளாளா் வி.நாகராஜன், முன்னாள் பொருளாளா் அண்ணமாா் பெரியசாமி, செயற்குழு உறுப்பினா் பி.சா்வலிங்கம், முதல்வா் டி.நதியா அரவிந்தன் ஆகியோா் பாராட்டினா்.