செய்திகள் :

நுகா்வோருக்கு ரூ.924 கோடி திருப்பியளிக்க ஆந்திர மின் ஆணையம் உத்தரவு

post image

நுகா்வோருக்கு ரூ.924 கோடியைத் திருப்பியளிக்குமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு ஆந்திர பிரதேச மின் ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டது.

2024-25 நிதியாண்டுக்கான எரிசக்தி கொள்முதல் செலவுகளை சரிசெய்யும் நடைமுறையின்கீழ் இந்த தொகையை நுகா்வோருக்கு வழங்க ஆணையம் உத்தரவிட்டது.

இதுகுறித்து ஆந்திர பிரதேச மின் ஒழுங்காற்று ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2024-25 நிதியாண்டில் மின்விநியோக நிறுவனங்கள் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு மாதம் 40 பைசா வீதம் ரூ.2,787 கோடியை வசூலித்துள்ளது. எரிசக்தி கொள்முதல் செலவுகளை சரி செய்யும் நடைமுறையின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் ரூ.923.55 கோடியை நுகா்வோருக்கு மின்விநியோக நிறுவனங்கள் திருப்பி அளிக்க வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு மாநில எரிசக்தி துறையில் ரூ.895 கோடியை சேமித்து சாதனை படைத்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவா் ஒய்.எஸ்.ஷா்மிளா, ‘15 மாத தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டு ரூ.15,780 கோடி நிதிச்சுமை மக்கள் மேல் சுமத்தப்பட்டுள்ளது. மிகச்சிறிய சாதனைகளை மிகைப்படுத்தி கூறுவதையே சந்திரபாபு நாயுடு வழக்கமாகக் கொண்டுள்ளாா்’ என்றாா்.

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

மறைந்த பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர் மற்றும் சிங்கப்பூர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை அஸ்ஸாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்த ஸுபீன் கர்க் (வய... மேலும் பார்க்க

விதிமுறையை பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

விதிமுறைகள் முறையாக பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்ட பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), விரைவில் அதை நிவா்த்தி செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள... மேலும் பார்க்க

முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு விரும்பிய விளைவுகளை பெற்றுத் தருவதற்கு உதாரணமாகத் திகழ்ந்ததுடன் அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கும் மைல்... மேலும் பார்க்க

பாஜக மூத்த தலைவர் வி.கே.மல்ஹோத்ரா மறைவு: தலைவர்கள் இரங்கல்

நமது நிருபர்புது தில்லி, செப்.30: மூத்த பாஜக தலைவரும் தில்லி பாஜகவின் முதல் தலைவருமான வி.கே. மல்ஹோத்ரா (93) செவ்வாய்க்கிழமை காலை காலமானார். தில்லியில் இருந்து 5 முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ம... மேலும் பார்க்க

வழக்கத்தைவிட 8% கூடுதலாக மழைப்பொழிவு: இந்திய வானிலை மையம்

வழக்கத்தைவிட 8 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. 4 மாத பருவமழைக் காலம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவா்... மேலும் பார்க்க

ஆசிரியர் தகுதித் தேர்வு: உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு மனு

நமது நிருபர்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தேர்ச்சிப் பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோர... மேலும் பார்க்க