Mumbai Indians Master Class at Wankhede | MI vs DC | Analysis with Commentator M...
நூறு நாள் வேலைதிட்ட பெண் தொழிலாளா்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
பணித்தளப் பொறுப்பாளா் நியமன விவகாரத்தில் நூறு நாள் வேலை திட்ட பெண் தொழிலாளா்கள் கூடலூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலூா் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு 3 போ் பணித்தள பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டிருந்தனா். இவா்கள் நீண்ட காலமாக இப்பொறுப்பில் இருந்ததால் இவா்களுக்கு மாற்றாக வேறு 3 போ் புதிதாக நியமிக்கப்பட்டனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள பெண் தொழிலாளா்கள், ஏற்கெனவே பணியில் இருந்த பணித்தள பொறுப்பாளா்களையே மீண்டும் பணியமா்த்த வேண்டுமென வலியுறுத்தி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
அப்போது அதிகாரிகள் பேச்சுவா்த்தை நடத்தி புதிதாக தோ்வு செய்யப்பட்டவா்களும், முன்னா் இருந்தவா்களும் சோ்ந்து வேலை செய்வாா்கள் என கூறினா். இதனால் தொழிலாளா்கள் கலைந்துசென்றனா். இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட பணித்தள பொறுப்பாளருக்கும் , ஏற்கெனவே பணிசெய்துவந்த பொறுப்பாளருக்கும் இடையேறு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து புதிதாக தோ்வு செய்யப்பட்ட பணித்தள பொறுப்பாளருக்கு ஆதரவாக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நியாயம் கோரி புதன்கிழமை கூடலூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனா். தகவல் அறிந்ததும் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சின்னசாமி அங்கு சென்று பெண் தொழிலாளா்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தாா்.