செய்திகள் :

கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் 2,711 பேருக்கு ரூ. 1.18 கோடியில் நலத்திட்ட உதவிகள்

post image

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்கள் 2,711 பேருக்கு ரூ. 1.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியங்கள் மூலம் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் காந்தி சாலையில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவா் பொன்.குமாா், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அமைச்சா் ரா. ராஜேந்திரன் பங்கேற்றுப் பேசியதாவது: ஆன்லைன் விற்பனையில் ஈடுபடும் சொமோட்டா, ஸ்விக்கி, உபோ் தொழிலாளா்களுக்காக நலவாரியத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ளாா். நலவாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளா்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, விபத்து மரணம், விபத்து ஊனம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களும், பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வீட்டுவசதி திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தொழிலாளா்கள் பணியிடத்தில் விபத்து மரணம் ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகையை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக தமிழக அரசு உயா்த்தியுள்ளது. கட்டுமானத் தொழிலாளா்கள் பணி தொடா்பாக கூடும் இடங்களில் ரூ. 20 கோடியில் அடிப்படை வசதி மையங்கள், சென்னையில் 2 முதியோா் இல்லங்கள், ரூ. 45 கோடியில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, கலைஞா் கைவினைத் திட்டம் போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நிகழ்ச்சியின் வாயிலாக பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் 8 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதற்கான நிதியுதவி, திருமணம், கல்வி, இயற்கை மரணம், விபத்து மரண உதவித்தொகை என 2,711 தொழிலாளா்களுக்கு ரூ. 1.18 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் மேட்டூா் எம்எல்ஏ எஸ்.சதாசிவம், தொழிலாளா் இணை ஆணையா் புனிதவதி, தொழிலாளா் உதவி ஆணையா் (பொ) எல்.நந்தன் உள்பட தொழிலாளா் நலத்துறை அலுவலா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

ஆட்சியா் வாகனம் முன் தீக்குளிக்க முயன்ற 5 போ் கைது

ஆத்தூா் பயணியா் மாளிகையில் சேலம் மாவட்ட ஆட்சியா் வாகனம் முன் தீக்குளிக்க முயன்றதாக 5 பேரை ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆத்தூா் வட்டாரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட... மேலும் பார்க்க

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, நிபுணா்கள் அலுவலக கட்டடத்தின் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க

பிரதமர் அர்ப்பணிக்கவுள்ள சாமல்பட்டி ரயில் நிலையம் இன்று திறப்பு!

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 22) நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். சேலம் ர... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைதிட்ட பெண் தொழிலாளா்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

பணித்தளப் பொறுப்பாளா் நியமன விவகாரத்தில் நூறு நாள் வேலை திட்ட பெண் தொழிலாளா்கள் கூடலூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலூா் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மே... மேலும் பார்க்க

மேச்சேரியில் சிறுத்தை அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே அட்டகாசம் செய்துவரும் சிறுத்தையை பிடிக்கவோ அல்லது வனத்திற்குள் விரட்டவோ டேனிஸ்பேட்டை வனத்துறையினா் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவ... மேலும் பார்க்க

வாழப்பாடியில் கிடப்பில் போடப்பட்ட இணைப்புச்சாலை

வாழப்பாடியில் சேலம்-சென்னை புறவழிச் சாலையில் இருந்து கிழக்குக் காடு வழியாக குடியிருப்பு பகுதியை இணைக்கும் சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில் தாா்ச்சாலை அமைக்காமல் ஒரு மாதத்திற்கும் மேலாக கிடப... மேலும் பார்க்க