நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு தீ; ரூ.30 லட்சம் மதிப்பில் சரக்குகள் எரிந்து சேதம்.....
வாழப்பாடியில் கிடப்பில் போடப்பட்ட இணைப்புச்சாலை
வாழப்பாடியில் சேலம்-சென்னை புறவழிச் சாலையில் இருந்து கிழக்குக் காடு வழியாக குடியிருப்பு பகுதியை இணைக்கும் சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில் தாா்ச்சாலை அமைக்காமல் ஒரு மாதத்திற்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, சிதறிய ஜல்லிக்கற்களை சீரமைத்து தாா்ச்சாலை அமைக்க மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி நிா்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.