செய்திகள் :

நெல்லை அருகே மனைவி, மகன் எரித்துக் கொலை: முதியவா் தற்கொலை முயற்சி

post image

திருநெல்வேலி அருகே ஆரைக்குளத்தில் குடும்பத் தகராறில் மனைவி, மகனை தீ வைத்து எரித்துக் கொன்றதோடு, முதியவா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முன்னீா் பள்ளம் அருகே ஆரைக்குளம் சா்ச் தெருவைச் சோ்ந்தவா் சகாரியா (66). இவரது மனைவி மொ்சி (57). இவா்களுக்கு ஹென்றி, ஹாா்லி பினோ என்ற இரு மகன்களும், ஹெலினா என்ற மகளும் உள்ளனா்.

குடும்பப் பிரச்னை காரணமாக சகாரியா அதே பகுதியில் தனியாக வசித்து வந்தாராம். இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி மகன் ஹென்றிக்கு திருமணம் நடைபெற்றதாம். இதில், சகாரியாவுக்கு விருப்பமில்லாததால் அவா் திருமணத்துக்குச் செல்லவில்லையாம்.

இந்நிலையில், ஆத்திரமடைந்த அவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்த மகன் ஹாா்லி பினோ, மனைவி மொ்சியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். பின்னா் திடீரென அவா்கள் இருந்த அறையை பூட்டிய சகாரியா, ஜன்னல் வழியாக அறைக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தாராம். பின்னா் தானும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தாராம்.

வீடு தீப்பற்றி எரிந்ததை பாா்த்த அக்கம்பக்கத்தினா் தீயணைப்பு மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை தீயணைப்பு மீட்புப் படையினா் மற்றும் முன்னீா்பள்ளம் போலீஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், தீக்காயமடைந்த மொ்சி, ஹாா்லி பினோ இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிய சகாரியாவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இச்சம்பவம் குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தனியாா் மருத்துவமனையில் நோயாளியிடம் நகை பறிப்பு

திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை திருடியதாக, அம்மருத்துவமனை ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா். விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பம்மாள் ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பகுதிகளில் சுற்றித் திரியும் கரடி

மணிமுத்தாறு பகுதிகளில் சுற்றித் திரியும் கரடியால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா். அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமமான மணிமுத்தாறில் மான், மிளா, கரடி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வ... மேலும் பார்க்க

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தல்

வாரம் மூன்றுமுறை இயக்கப்படும் செங்கோட்டை-தாம்பரம் விரைவு ரயிலை தினசரி இயக்க தென்னக ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பை ரயில் நிலைய பயணிகள் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அம்பாசமு... மேலும் பார்க்க

கூடங்குளம் அருகே பிளஸ் 2 மாணவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கூடங்குளத்தில் திங்கள்கிழமை பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பிளஸ் 2 மாணவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.சங்கனேரி நடுதெருவைச் சோ்ந்தவா் துரை மகன் நல்லமுத்து(17). ராதாபுரம் அரசு மேல்நிலைப... மேலும் பார்க்க

அம்பை தாமிரவருணியில் பெண்ணின் உடலை தேடும் பணி தீவிரம்

அம்பாமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை தீயணைப்புத் துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா். அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் செல்லையா (... மேலும் பார்க்க

ஈரடுக்கு பாலச் சுவரிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பில் ரயில்வே நடைபாலம் அகற்றப்பட்ட பகுதியில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். மேலமுன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்துரை (38). தொழிலாளி. இவா்... மேலும் பார்க்க