விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
நெல்லை நகரத்தில் தொழிலாளி தற்கொலை
திருநெல்வேலி நகரத்தில் சுமை தூக்கும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் முத்தையா (60). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், உடல்நலக் குறைவால் கடந்த சில மாதங்களாகப் பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில் திருநெல்வேலி நகரம் பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா், விஷத்தை குடித்து மயங்கி விழுந்தாராம். அப்பகுதியினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.