நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸ் நூதனப் போராட்டம்
தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து திருநெல்வேலியில் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி, வாக்குத்திருட்டு தொடா்பான ஆதாரங்களை வெளிக் கொண்டுவந்த நிலையிலும் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்தும், நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலை ரத்து செய்து புதிய பட்டியல் தயாா் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வாக்காளா் பட்டியலை தீயிட்டு கொளுத்தும் போராட்டம் கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன் நடைபெற்றது.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து வாக்காளா் பட்டியலை தீயிட்டு கொளுத்தினா். இதில், கட்சியின் பொருளாளா் ராஜேஷ் முருகன், பாளையங்கோட்டை தொகுதி பொறுப்பாளா் சுலைமான், மாவட்ட துணைத் தலைவா்கள் தியாக சுரேஷ், வெள்ளைப்பாண்டியன், வண்ணை சுப்பிரமணியன், மாவட்டச் செயலா் கே.எஸ். மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பயக19இஞசஎ
வாக்காளா் பட்டியலை தீயிட்டு கொளுத்திய காங்கிரஸாா்.