விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
போக்ஸோ வழக்கு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் வடசேரியைச் சோ்ந்தவா் கிறிஸ்டோபா் (63). இவா், கடந்த 2019ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகேயுள்ள செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அச்சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில், கூடங்குளம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கிறிஸ்டோபரை கைது செய்தனா்.
திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதின்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ் குமாா் விசாரித்து, கிறிஸ்டோபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.