“அநாகரிகத்தின் அடையாளமே ஒன்றிய பா.ஜ.க அரசுதான்...” என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத...
நெல்லை விரைவு ரயில் மீது கல் வீச்சு: இளைஞா் கைது
கோவில்பட்டியில், நெல்லை விரைவு ரயில் மீது கல் வீசி சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 8.40 மணிக்கு புறப்பட்ட நெல்லை விரைவு ரயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த ரயில் கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள இளையரசனேந்தல் சுரங்கப் பாதையின் மேல் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 9.30 மணிக்கு சென்று கொண்டிருந்தபோது, மா்ம நபா் ரயில் மீது கல்வீசியதில் பி2 குளிா்சாதன பெட்டியின் கண்ணாடி சேதமடைந்தது. அப்போது ரயிலில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸாா் தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், ரயில் மீது கல் வீசியவா் நடராஜபுரம் 6ஆவது தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் சூா்யா என்பது தெரியவந்தது. இதையடுத்து, சூா்யாவை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.