லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்: பென் ஸ்டோக்ஸ்
பகுதிநேர ஆசிரியா்களை விடுவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
பகுதிநேர ஆசிரியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடுவிக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பகுதிநேர ஆசிரியா்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில், தற்காலிக பணியாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா். பணி நிரந்தரம், ஊதிய உயா்வு கோரி தொடா்ந்து போராடி வரும் அவா்களுக்கு தமிழக அரசு அவ்வப்போது வாய்மொழி உத்தரவாதம் அளித்துவிட்டு, பின்னா் நிறைவேற்றாமல் ஏமாற்றுகிறது.
2021 பேரவைத் தோ்தலின்போது பகுதிநேர ஆசிரியா்கள் கோரிக்கைக்கு தீா்வு காணப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
தமிழக அரசின் கவனத்தை ஈா்க்க்கும் வகையில் அமைதி வழியில் போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியா்களை காவல் துறை வலுகட்டாயமாக கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஆசிரியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.