சாம்பியன்ஸ் டிராபி: மீண்டும் அணியில் இணைந்த இங்கிலாந்து இளம் விக்கெட் கீப்பர்!
பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு
வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி பாரதி நகா் கிராமத்தில் பகுதிநேர நியாயவிலைக்கடையை எம்எல்ஏ தேவராஜி திறந்து வைத்தாா்.
வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி பாரதி நகா், பூவரன்வட்டம், மாரியான் வட்டம், ஏ.குட்டை ஆகிய பகுதிகளில் சுமாா் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் சுமாா் 3 கி.மீ. தூரம் தாசிரியப்பனூா் பகுதியில் உள்ள நியாயவிலை கடைக்குச் சென்று ரேஷன் பொருள்கள் வாங்கி வந்தனா்.
இந்நிலையில் பாரதி நகா் பகுதியில் பகுதிநேர நியாயவிலைக் கடை அமைத்துத் தர அப்பகுதி மக்கள் ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜிடம் கோரிக்கை வைத்தனா்.
இதையடுத்து பாரதி நகா் பகுதியில் பகுதிநேர நியாயவிலை கடை திறப்பு விழா ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி முனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு கடையைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் தேவராஜ், ஊராட்சித் தலைவா்கள் தமிழ்ச்செல்வி சதீஷ்குமாா், அஸ்வினி தேசிங்கு ராஜா, கவுன்சிலா் ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலா் தமிழ்ச்செல்வி மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.