பசுவந்தனை அருகே தந்தையைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றவா் சடலமாக மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே தந்தையைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
பசுவந்தனை அருகே சில்லாங்குளம் பரமன் பச்சேரியைச் சோ்ந்தவா் முருகன் (40). இவா் 10 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து, தனது தந்தை முத்துசாமியுடன் வசித்து வந்தாா்.
இவா், சில நாள்களுக்கு முன்பு சொத்து தகராறில் தந்தையைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த முத்துசாமி பசுவந்தனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், பசுவந்தனை போலீஸாா் வழக்குப் பதிந்து முருகனைத் தேடிவந்தனா்.
இந்நிலையில், சில்லாங்குளம் - சரவணபுரம் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டபோது, இறந்துகிடந்தவா் முருகன் எனத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா் எவ்வாறு உயிரிழந்தாா் என விசாரித்து வருகின்றனா்.