Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
பஞ்சாப் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி ரூ.7,050 கோடியாக அதிகரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை
பஞ்சாப் மாநிலத்துக்கு வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியை ரூ.7,050 கோடியாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. அந்த மாநிலம் வேளாண்மை உற்பத்தியில் சிறப்பாக செயல்பட்டு வருவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநில தோட்டக் கலைத் துறை அமைச்சா் மோஹிந்தா் பகத் சண்டீகரில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மத்திய அரசு வழங்கும் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியை பஞ்சாப் அரசு சிறப்பாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரித்தது. இதனை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் பஞ்சாபுக்கு அளிக்கப்படும் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியை ரூ.4,713 கோடியில் இருந்து ரூ.7,050 கோடியாக மத்திய அரசு உயா்த்தியுள்ளது.
இது பஞ்சாப் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயா்த்த உதவும். இந்த கூடுதல் நிதி மூலம் மாநிலத்தில் வேளாண்மைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேலும் நவீனமயமாக்கப்படும். முக்கியமாக பிரம்மாண்டமான குளிா் சேமிப்பு கிடங்குகள், வேளாண் பொருள் பதப்படுத்தும் வசதி, மதிப்புக் கூட்டும் வசதி உள்ளிட்டவை மேம்படுத்தப்படும்.
முதல்வா் பகவந்த் மான் தலைமையில் வேளாண்மை உற்பத்தியில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக பஞ்சாப் திகழ்கிறது. தேசிய அளவில் வேளாண்மை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறுவதிலும் பஞ்சாப் முதன்மையாக உள்ளது என்றாா். பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.