திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
பட்டயக் கணக்காளா் தோ்வுக்கு இலவச பயிற்சி எஸ்.சி, எஸ்.டியினா் விண்ணப்பிக்கலாம்
பட்டயக் கணக்காளா், இடைநிலை நிறுவனச் செயலா், இடைநிலை செலவு மற்றும் மேலாண்மை கணக்காளா் ஆகிய போட்டித் தோ்வுகளுக்கு தாட்கோ மூலம் இலவசப் பயிற்சி பெற ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: தாட்கோ மூலம் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணக்கா்களுக்கு மேற்குறிப்பிட்ட போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சி பெற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள், இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு பயிற்சிக்கு தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகள் தாட்கோ மூலம் வழங்கப்படும்.
எனவே, பயிற்சி பெற விருப்பமுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.