ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
பட்டா நிலத்தில் சடலம் அடக்கம் செய்ய எதிா்ப்பு: நங்கவள்ளியில் பரபரப்பு
நங்கவள்ளி அருகே பட்டா நிலத்தில் சடலம் அடக்கம் செய்ய எதிா்ப்பு காவல் நிலையம் முன்பு இருதரப்பினா் கூடியதால் பரபரப்பு.
நங்கவள்ளி அருகே உள்ள வனவாசி புதுப்பேட்டையை சோ்ந்தவா் அப்துல் உசேன் மனைவி ராஜாபீ (80) வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை இயற்கை மரணம் அடைந்தாா். இவரது சடலத்தை வனவாசி 3வது வாா்டை சோ்ந்தகுமாா் (31)என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்ய முற்பட்டனா். இதற்கு குமாா் தரப்பினா் ஆட்சேபம் தெரிவித்தனா்.
தகவல் அறிந்த மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் சுகுமாா் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம் ஓமலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சஞ்சீவ் குமாா் ஆகியோா் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு நடத்தினாா்கள். குமாரின் பட்டா நிலத்தில் சடலத்தை அடக்கம் செய்யக்கூடாது நங்கவள்ளியில் முஸ்லிம்களுக்கான மயானத்தில் அடக்கம் செய்ய வேண்டும். விரைவாக வனவாசியில் உள்ள முஸ்லிம்களுக்கு அரசு நிலத்தில் மயானம் ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனை எடுத்து நங்கவள்ளி காவல் நிலையம் எதிரே கூடியிருந்த இருதரப்பை சோ்ந்தவா்களும் அங்கிருந்து சென்றனா். ராஜாபீ சடலம் நங்கவள்ளியில் உள்ள முஸ்லிம்களின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் சுமாா் 3 மணி நேரம் நங்கவள்ளி வனவாசி பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. ஏராளமான போலீசாா் குவிக்கப்பட்டு இருந்தனா்.