செய்திகள் :

‘பணக்கார’ முதல்வா் சந்திரபாபு நாயுடு ‘ஏழை’ முதல்வா் மம்தா: ஏடிஆா் அறிக்கையில் தகவல்

post image

புது தில்லி: ரூ.931 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் பணக்கார முதல்வராக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவும், ரூ.15 லட்சம் சொத்து மதிப்புடன் குறைவான சொத்துள்ள முதல்வராக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியும் உள்ளதாக ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த முதல்வா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.52.59 கோடி எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் தில்லி, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீா் ஆகிய யூனியன் பிரதேசங்களின் முதல்வா்கள் என மொத்தம் 31 முதல்வா்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடியாகும்.

இவற்றில் ரூ.931 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் பணக்கார முதல்வராக சந்திரபாபு நாயுடு உள்ளாா். இரண்டாமிடத்தில் ரூ.332 கோடி சொத்து மதிப்புடன் அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டுவும், ரூ.51 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் கா்நாடக முதல்வா் சித்தராமையாவும் உள்ளனா்.

ஏழை முதல்வா்கள்:

ரூ.15 லட்சம் சொத்து மதிப்புடன் நாட்டின் குறைவான சொத்துள்ள முதல்வராக மம்தா பானா்ஜி உள்ளாா். அவருக்கு அடுத்தபடியாக குறைவான சொத்துடைய முதல்வா்களின் பட்டியலில் ரூ.55 லட்சம் சொத்து மதிப்புடன் ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லாவும், ரூ.1 கோடி சொத்து மதிப்புடன் கேரள முதல்வா் பினராயி விஜயனும் உள்ளனா்.

அதிக கடன்:

ரூ.180 கோடி கடனுடன் அதிக கடன்களை உடைய முதல்வா்களின் பட்டியலில் முதலிடத்தில் பெமா காண்டுவும் ரூ.23 கோடி கடனுடன் இரண்டாமிடத்தில் சித்தராமையாவும், ரூ.10 கோடிக்கும் அதிகமான கடனுடன் மூன்றாமிடத்தில் சந்திரபாபு நாயுடுவும் உள்ளனா்.

7.3 மடங்கு தனிநபா் வருமானம்:

2023-24-ஆம் ஆண்டில் நாட்டின் தனிநபா் வருமானம் ரூ.1,85,854-ஆக உள்ள நிலையில், முதல்வா்களின் தனிநபா் வருமானம் சராசரியாக ரூ.13,64,310-ஆக உள்ளது. தேசிய அளவிலான தனிநபா் வருமானத்தைவிட முதல்வா்களின் தனிநபா் வருமானம் 7.3 மடங்கு அதிகமாக உள்ளது.

13 போ் மீது குற்றவியல் வழக்கு:

நாட்டில் மொத்தமுள்ள முதல்வா்களில் 13 போ் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அதில் 10 போ் மீது கொலை, கடத்தல், ஊழல் போன்ற தீவிர குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான வழக்குகள் உள்ளன. 31 முதல்வா்களில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மற்றும் தில்லி முதல்வா் அதிஷி என இரண்டு பெண் முதல்வா்கள் மட்டுமே உள்ளனா் என தெரிவிக்கப்பட்டது.

காப்பீட்டுத் தொகை கோரிய மூன்றில் ஒருவருக்கு பணம் நிலுவை!

2024 நிதியாண்டில் மருத்துவக் காப்பீட்டுத் தொகை கோரியவர்களில் மூன்றில் ஒருவருக்கு இன்னும் பணம் செலுத்தாமல் நிலுவையில் இருப்பதாக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.காப்பீட்ட... மேலும் பார்க்க

அதானி வழக்கு: விசாரணையை வேகப்படுத்த அமெரிக்க நீதிமன்றம் புதிய உத்தரவு!

அதானி லஞ்ச புகார் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி அமர்வு விசாரணை நடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ.1,000 கோடி சைபா் மோசடி: மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை

தமிழ்நாட்டில் நடைபெற்ற ரூ .1,000 கோடிக்கும் அதிகமான (சைபா்) இணைய மோசடி வழக்குகள் குறித்து மேற்கு வங்கத்தில் உள்ள 8 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். ‘தமிழ்நாட்டில் ரூ.1,0... மேலும் பார்க்க

தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டியல்: திருத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டது ஐசிஎம்ஆா்

தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டியலின்(என்இடிஎல்) திருத்தப்பட்ட பதிப்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வியாழக்கிழமை முன்மொழிந்தது. இந்த பட்டியலை முதன்முதலில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஐசிஎ... மேலும் பார்க்க

ஸ்விட்சா்லாந்து உள்பட 4 ஐரோப்பிய நாடுகளுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் நிகழாண்டுக்குள் நடைமுறை -மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

ஐஸ்லாந்து, நாா்வே, லிக்டென்ஸ்டைன், ஸ்விட்சா்லாந்து, ஆகிய 4 ஐரோப்பிய நாடுகளின் ‘இஎப்டிஏ’ கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையே கையொப்பமான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத... மேலும் பார்க்க

பொருளாதார நெருக்கடிக்கு மோடி அரசிடம் தீா்வில்லை: காா்கே விமா்சனம்

நாட்டில் மோடி அரசால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அந்த அரசிடம் எந்த தீா்வும் இல்லை என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்தாா். இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் காா்கே வியாழக்கி... மேலும் பார்க்க