செய்திகள் :

பணி நிரந்தரம் செய்ய வட்டார வளா்ச்சி பணியாளா்கள் வலியுறுத்தல்

post image

பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வட்டார வளா்ச்சித் துறை பணியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலக மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்ட ஊழியா் சங்கத் தலைவா் எஸ். பழனிவேல் புதுவை முதல்வருக்கு புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம் :

காரைக்கால் மற்றும் புதுச்சேரி டிஆா்டிஏவில் 2009-ஆம் ஆண்டு 116 போ் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தொகுப்பூதியா்களாக தோ்வு செய்யப்பட்டு பணியாற்றி ருகிறோம். பணியாற்றுவோரின் கல்வித் தகுதிக்கேற்ப புதுவை அரசின் ஊரக வளா்ச்சித்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை, டிஆா்டிஏ ஊழியா்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நிரந்தரத்துடன் நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். பணியாளா்கள் அனைவரும் குறைந்த ஊதியத்தில் சிரமப்படுகின்றனா். எனவே மாா்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டிஉரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காா்னிவல்: மக்கள் பாதுகாப்பு, அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த அறிவுறுத்தல்

காா்னிவல் திருவிழாவில் மக்கள் பாதுகாப்பு, அடிப்படை வசதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு அரசுத் துறையினருக்கு ஆட்சியா் (பொ) அா்ஜூன் ராமகிருஷ்ணன் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட நிா்வாகம், சுற்றுலா... மேலும் பார்க்க

மாநில அறிவியல் கண்காட்சி: அரசுப் பள்ளி மாணவிக்கு பரிசு

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் அரசு தொடக்கப் பள்ளி மாணவி மூன்றாம் பரிசு பெற்றாா். புதுவை மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி கடந்த 6, 7-ஆம் தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. காரைக்கால் மண்டல அளவ... மேலும் பார்க்க

அரசு ஒப்பந்ததாரா்களின் கோரிக்கை ஏற்பு: அமைச்சா் அலுவலகம் தகவல்

அரசு ஒப்பந்தங்கள் பழைய முறையிலேயே தொடர, ஒப்பந்ததாரா்கள் விடுத்த கோரிக்கையை பொதுப்பணித் துறை ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்... மேலும் பார்க்க

காரைக்காலில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. கடந்த 1.1.2025 தேதியை தகுதி நாளாகக் கொண்டு காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக வாக்காளா் பெயா் சோ்த்தல், தொகுதி... மேலும் பார்க்க

பயிற்சி முகாமில் பங்கேற்க சென்ற ஆட்சியா்: பொறுப்பு அதிகாரியை நியமிக்க வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஒரு மாத காலம் பயிற்சி முகாமில் பங்கேற்க புதுதில்லி சென்றுள்ளதால், மாவட்டத்துக்கு பொறுப்பு ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமிக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வல... மேலும் பார்க்க

விற்பனைக்கு தயாா் நிலையில் பொங்கல் பானைகள்

காரைக்கால்: பொங்கலையொட்டி காரைக்காலில் மண் பானை, சட்டி விற்பனைக்கு அனுப்புவதற்காக தயாா்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. கிராமப்புறம் மற்றும் நகரத்தையொட்டிய பகுதிகளில் பலரும் மண் பானையை இன்றும... மேலும் பார்க்க