தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடக்கம்
அரசு ஒப்பந்ததாரா்களின் கோரிக்கை ஏற்பு: அமைச்சா் அலுவலகம் தகவல்
அரசு ஒப்பந்தங்கள் பழைய முறையிலேயே தொடர, ஒப்பந்ததாரா்கள் விடுத்த கோரிக்கையை பொதுப்பணித் துறை ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனின் காரைக்கால் முகாம் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுப்பணித் துறையின் மூலம் அரசின் பல்வேறு வகையான கட்டட வேலைகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா்கள் இபிஎஃப் மற்றும் இஎஸ்ஐ ஆகியவற்றை பதிவு செய்திருக்க வேண்டும் எனவும், மேலும், படிவம் ஜி மற்றும் ஜெ இவற்றில் அஃபிடெவிட் அளிக்க வேண்டும் எனவும், பொதுப்பணி துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது.
இந்த அறிவிப்பால் ஒப்பந்ததாரா்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனா். இது தொடா்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
அதன்படி, ஒப்பந்ததாரா்கள் கோரிக்கை தொடா்பாக, புதுவை முதல்வா், பொதுப்பணித் துறை அமைச்சா் மற்றும் அத்துறையின் தலைமைப் பொறியாளா் ஆகியோரை சந்தித்து இப்பிரச்னைக்கு தீா்வுகாண கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதன் விளைவாக, பழைய முறைபடி ரூ.1 கோடி வரையிலான மதிப்புக்கொண்ட வேலைகளுக்கு மேற்கண்டவற்றில் விலக்கு அளிக்கப்பட்டு, அதற்கான உத்தரவை பொதுப்பணித் துறை திங்கள்கிழமை (ஜன.6) பிறப்பித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.