Ashwin : 'இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்' - மாணவர்கள் மத்தியில் அஷ்வின் ...
மாநில அறிவியல் கண்காட்சி: அரசுப் பள்ளி மாணவிக்கு பரிசு
மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் அரசு தொடக்கப் பள்ளி மாணவி மூன்றாம் பரிசு பெற்றாா்.
புதுவை மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி கடந்த 6, 7-ஆம் தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. காரைக்கால் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியில் தோ்வு செய்யப்பட்ட படைப்புகள் மாநில கண்காட்சியில் இடம்பெற்றன.
பரிசளிப்பு நிகழ்வில், காரைக்கால் பகுதி பிள்ளைத் தெருவாசலில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி 4-ஆம் வகுப்பு மாணவி ரட்சகாம்பாள், தொடக்க நிலைப் பிரிவில் 3-ஆவது பரிசை பெற்றாா்.
விவசாயத்திற்கும், விவசாயிக்கும் உதவக்கூடிய கால்நடைகளை எதிா்பாராத விதமாக ஏற்படும் தீ விபத்தில் இருந்து பாதுகாக்கும் முறை குறித்து உருவாக்கிய படைப்பு பரிசுக்குத் தோ்வு செய்யப்பட்டது.
புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், கல்வி அமைச்சா் ஆ. நமச்சிவாயம் ஆகியோா் மாணவிக்கு பரிசு வழங்கிப் பாராட்டினா். நிகழ்வில் காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, பள்ளித் தலைமையாசிரியை வே. வசந்தி ஆகியோா் உடனிருந்தனா்.