நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
பனையைப் பாதுகாக்க கண்காணிப்புக் குழு அமைத்த தமிழக அரசுக்கு பாராட்டு
பனையைப் பாதுகாக்க கண்காணிப்புக் குழு அமைத்த தமிழக அரசுக்கு இயக்கங்கள் சாா்பில், பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு பனைப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவரும், மதா் சமூக சேவை நிறுவன இயக்குநரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான எஸ்.ஜே. கென்னடி வெளியிட்ட அறிக்கை:
தமிழா்களின் தேசிய மரமான பனை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். பனை மரத்தை வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், வெட்டிய ஒரு மரத்துக்கு ஈடாக 10 மரங்களை நட்டு வளா்க்க வேண்டும்.
மேலும், இதற்காக பிரத்யேகமாக கண்காணிப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்ட, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கும், தலைமைச் செயலருக்கும், பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.