செய்திகள் :

பரமகுருவும் குதிரை வண்டிக்காரரும்! - குறுங்கதை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்

 மகுடபதியின் குதிரை வண்டியிலிருந்து பேச்சாளர் பரமகுரு இறங்கியபோது அந்தச் செயலரைத்தவிர அங்கு வேறு யாருமில்லை வரவேற்க. பெய்யும் மழையையும் அடிக்கும் குளிர் காற்றையும் தவிர, செயலர் முகத்தில் ஈயாடவில்லை, கண்களில் அதிர்ச்சி முகாமிட்டிருந்தது. அதைவிட அதிக அதிர்ச்சி பரமகுருவுக்கு, இப்படி ஒரு சூழ்நிலையை அவர் வாழ் நாளிலேயே சந்தித்தது இல்லை.

காரிலிருந்து இறங்கவே கஷ்டப்பட வேண்டியிருக்கும் பல இடங்களில், ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள்.

இது அவருக்கு மிகவும் புதிய அனுபவம். ஆனால் அந்த மைதானம் ரம்மியமாக இருந்தது, மூணாறின் மிக உயரமான இடத்தில் உள்ளது அது. பரமகுருவுக்கு எப்பொழுமே தன்னைப்பற்றிய பெருமை உண்டு.

ஆனால் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார், தன்னை மிஞ்சிய பேச்சாளர்கள் வெகு குறைவு என்பது அவர் கருத்து. தனக்கு நிகராக வாதிட வையத்தில் யாரிருக்கிறார்கள் என்ற இறுமாப்பு உள்ளுக்குள் உண்டு. ஆனால் இடம், பொருள், ஏவல் அறிந்து, அடக்கி வாசிப்பார். இந்தப் பயணங்கூட அந்த விதமாகத்தான், தமிழ் நாட்டைத்தாண்டி கேரளாவிலும் தன் புகழைப் பரப்ப வேண்டுமென்றுதான் தனக்குத்தெரிந்த தமிழ்நாட்டு நண்பரான அந்தச் செயலர் மூலம் ஏற்பாடு செய்யச் சொன்னார்.

சித்தரிப்புப் படம்

 செயலர் சிவா தமிழ் நாட்டிலிருந்து மூணாறு வந்து, அங்கு...இங்கு...என்று அலைந்து, ஒரு பெரிய தேயிலை நிறுவனத்தில் சேர்ந்து,மெல்ல...மெல்ல...உயர்ந்து மானேஜர் பதவி வகிக்கிறார்.

தற்போது, மூணாறில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம், அவர்களுக்காக ஒரு சங்கமும் உண்டு, அச்சங்கம் மூலமாக கலை நிகழ்ச்சிகள் நடத்துவதுண்டு. அதன் ஒரு அங்கம்தான் இந்த ஏற்பாடும். சுமார் ஐநூறு பேர் அமர இருக்கைகள் ஏற்பாடு செய்திருந்தார்,

என்ன? இப்படி ஒரு மழையும் காற்றும் திடீரென வரும் என்பதை அவர் அறியவில்லை. அவர் மட்டுமல்ல, யாரும் அறியவில்லை. அதிகமாக அடித்த காற்றில் மலைப்பாதையில் கற்கள் உருண்டு அவர் காரை ரிப்பேராக்கிவிட, பரமகுருவை குதிரை வண்டியில் வர வைக்க வேண்டிப்போனதில் அவருக்கு ஏகமாய் வருத்தம்.

அதனை, பரமகுருவிடம் கூறி மன்னிப்பு கேட்டபிறகும் அவர் அமைதியாகவில்லை. மேலும்,மழை காரணமாக பேச்சைக் கேட்க யாரும் வராத காரணம் வேறு அவரை வாட்டியது.

மூணாறு பகுதியில் குதிரைவண்டி மகுடபதியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சரியான வாடகை, நம்பிக்கையான பயணம், நேர்மையான உழைப்பு, இவைதான் மகுடபதியை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியவை. அதிகம் படிக்காத அவர் காசு, பணத்திற்கு சபலப்படாதவர். மூணாறின் மூலை முடுக்கெல்லாம் அவருக்கும், அவர் குதிரைக்கும் அத்துபடி.

சித்தரிப்புப் படம்

அறிவித்த நேரம் வந்தும்,பரமகுரு பேச்சைக் கேட்க யாரும் வரவில்லை, என்ன செய்யலாம் என்று சிவா மண்டையைப் பிய்த்துக்கொண்டும் ஒரு வழியும் தோன்றவில்லை, பரமகுருவிடமே கேட்கலாம் என்று அவரை அணுகினார்.

அவரோ... "இவ்வளவு தூரம் வந்துவிட்டேன், பேச வேண்டும் என்பதுதான் எனது ஆசையும், ஆனால் கேட்க ஆள் வேண்டுமே, உங்களையும் அந்தக் குதிரைக்காரனையும் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? நீங்கள் சரி, அவனுக்கு என்ன பெரிதாய்ப் புரியப்போகிறது?" என்றார்.

சிவாவுக்கோ, அவனாவது பேசும் வரை இருப்பானா? அல்லது வண்டியை ஓட்டிக் கொண்டு போய் விடுவானா? என்ற சந்தேகம், அவனிடமே கேட்டு விட்டால் என்ன?

அதனைப் பரமகுருவிடம் சொன்னபோது அவர் "அவனிடமா? குதிரை வண்டிக்காரனுக்கு என்ன தெரியப் போகிறது? சரி, உங்கள் விருப்பத்தை நான் கெடுக்க விரும்பவில்லை, கூப்பிட்டுக் கேளுங்கள்," என்று சாவகாசமாய்ச் சொன்னார்.

சிவா மகுடபதியை அருகில் அழைத்தார், பரமகுருவோ வேண்டா வெறுப்பாய் பார்த்துக் கொண்டிருந்தார்,"சொல்லுங்க வண்டிக்கார மகுடபதியே, ஐயா பேசலாமா?நாம கேட்கலாமா?"என்று கேட்டார்.

சித்தரிப்புப் படம்

" என்னய்யா நீங்க, நானோ மூனாங் கிலாஸ் தாண்டாத முட்டாள், எங்கிட்ட போயி இதெல்லாம் கேட்கிறீங்க, ஐயா வேற, அம்புட்டுத் தூரத்தில் இருந்து வந்திருக்காரு, எனக்குத் தெரிஞ்சதெல்லாம் குதிரையும், வண்டியும், இந்த ஊருந்தானுங்களே, ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன். நான் 20 குதிரைக்குப் புல்லு கொண்டு போறப்ப...லாயத்தில,19 குதிரை வெளியில ஓடி,ஒரு குதிரை மட்டும் இருந்துச்சுன்னா, ஒன்னுதானே இருக்குன்னு புல்லு போடாமல் வர மாட்டேன், அதுக்குன்னு உள்ள புல்லைப் போட்டுட்டுதான் வருவேன்," என்றார்.

பேச்சாளர் பரமகுரு அதனைக் கேட்டதும் ஆடிப்போனார். இந்த வண்டிக்காரனை என்னவோ என்று நினைத்தால் நமக்கே அறிவு புகட்டி விட்டானே,"நீ பேசுடா பரதேசி," என்று சூசமாகச் சொல்லி விட்டானே, இவன் வண்டிக்காரன்தானா? இல்லை... திருவிளையாடல் படத்தில் புலவரைக் காக்க வந்த பரமனா?

நம்ம தலைக்கனத்தைக் குறைக்க வந்தாரோ.. இவன் வடிவில், அதிர்ச்சியை வெளியில் காட்டாமல்,

"சிவா, அவர்தான் சொல்லி விட்டாரே, வந்து எதிரே உட்காருங்கள், நான் பேசுகிறேன்," என்று சொல்லிவிட்டு... நிதானமாக...அதே சமயம் பயபக்தியுடன் பேச ஆரம்பித்தார்.

அந்த இருவருக்காக, பத்தாயிரம் பேர் உள்ள கூட்டத்தில் எவ்வளவு உற்சாகமாகப் பேசுவாரோ...அப்படிப் பேசினார், அடிக்கடி வண்டிக்கார மகுடபதியின் முக பாவத்தைக் கவனித்துக் கொண்டார். சுமார் ஒன்றரை மணி நேரம் பேசி முடித்தார்.

சித்தரிப்புப் படம்

 மீண்டும் மகுடபதியின் வண்டியில் ஏறினார்... தங்கும் இடம் செல்ல, தான் மிக அருமையாகப் பேசி விட்டதாக அவருக்கு நினைப்பு, இருந்தாலும் மகுடபதி என்ன சொல்வானோ? என்ற பயமும் கூடவே இருந்தது.

துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அவனிடம் கேட்டார் பரமகுரு, "வண்டிக்கார ஐயா,என் பேச்சு எப்படி இருந்தது?ரசித்தீர்களா?"

"என்னய்யா நீங்க? இந்தக் குதிரை வண்டிக்காரங்கிட்ட இப்படிக் கேட்கறீங்க? எனக்குத் தெரிஞ்சதெல்லாம் குதிரைங்களும் இந்த ஊருந்தானுங்களே.

ஆனா, ஒன்னு சொல்றேன், நான் 20 குதிரைங்களுக்குப் புல்லு கொண்டுக்கிட்டு லாயத்துக்குப் போறப்ப, அங்க ஒரு குதிரை மட்டும் இருந்துச்சுன்னா அந்த ஒரு குதிரைக்கு என்ன அளவோ அதை மட்டும்தான் போடுவேன். கொண்டுக்கிட்டு வந்திட்டோம்னு  20 குதிரைங்க புல்லையும் அது ஒன்னுக்கு உதறி விட மாட்டேன், அம்புட்டுதாங்க எனக்குத் தெரியும்," சொல்லிவிட்டு அவர் குதிரையைத் தூண்டினார்,

 வண்டிக்குள்ளே…எல்லாம் தனக்குத் தெரியுமென்று இறுமாப்பாக இருந்த பிரபல பேச்சாளர் பரமகுரு, மயக்கமாகிக் கிடந்தார்.

 -ரெ.ஆத்மநாதன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

நீரதிகாரம் நாவல் இப்போது Audio வடிவில் | Vikatan Play | Neerathikaaram

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினது பென்னி குயிக்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்குப் பின்னாடி இருக்க காரணங்கள் உங்களுக்கு தெரியுமா? பிரிட்டிஷார் ஏன் அந்த அணையைக் கட்டுனாங்க... எப்படி அந்த இடத... மேலும் பார்க்க

`கொலை நகரமான டீ எஸ்டேட்’ : எரியும் பனிக்காடு புத்தக பின்னணி| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

திடீரென பூச்சியாய் மாறிய மனிதனின் கதை - காஃப்காவின் `உருமாற்றம்’ | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

வாய்மை எனப்படுவது யாதெனின்! - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

தமிழ் பண்பாட்டு ஆய்வாளர், எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைவு - இவரது நூல்களும்.. விருதுகளும் ஒரு பார்வை!

இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைதமிழ் இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைந்த செய்தி இன்று காலை வெளியானது. பண்பாட்டு ஆய்வுகள், மொழிப்பெயர்ப்புகள், நாவல்கள், இலக்கிய ஆய்வுக... மேலும் பார்க்க

"அம்மா சந்தேகப்பட்டு கதவைத் தட்ட அப்பா திறக்கவே இல்ல" - இந்திரா செளந்தர்ராஜன் மகள் வேதனை #Exclusive

எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் என்றாலே விடாது கருப்பு, மர்ம தேசம், இறையுதிர்க்காடு என அவருடைய அமானுஷ்யக்கதைகளும், ஆன்மிகக்கதைகளும்தான் நம் அனைவருடைய நினைவுக்கும் வரும்.இரண்டு நாள்களுக்கு முன்னால், 6... மேலும் பார்க்க