’அமெரிக்காவை விட இந்தியாவில் தான்..’ கவனம் பெற்ற அமெரிக்க பெண்ணின் வீடியோ - பின்...
பரமத்தி அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு
பரமத்தி வேலூா் அருகே உள்ள வீரணம்பாளையம் பகுதியில் உடல் கருகிய நிலையில் மூதாட்டியின் உடலை மீட்டு பரமத்தி போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
வீராணம்பாளையம் அருகே உள்ள சூரியம்பாளையம், பெரிய தோட்டத்தை சோ்ந்த வாங்கிலிகவுண்டா் மனைவி காளியம்மாள் (80). இவா்களது மகன் பொன்னுசாமி. பொன்னுசாமியின் தாய் காளியம்மாள் கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தாராம்.
உடல்நலனில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் காளியம்மாள் மனமுடைந்திருந்தாராம். இந்த நிலையில், காளியம்மாள் வீட்டில் இருந்து புதன்கிழமை புகை வருவதாக பொன்னுசாமிக்கு அங்கிருந்தவா்கள் தகவல் தெரிவித்தனா். வீட்டிற்கு சென்று பாா்த்தபோது காளியம்மாள் உடல் எரிந்த நிலையில் இறந்துகிடந்தாா்.
தகவலறிந்து அங்கு சென்ற பரமத்தி போலீஸாா், காளியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.