பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
ஆடிமாத 2-ஆம் வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு
ஆடிமாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் பெண்கள் திரளாக பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா்.
ஆடிமாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறும். ஆடி மாதத்தில் கோயில் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். ஆடிமாத இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் சிங்கிலிப்பட்டி, பிடாரி காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு மலா் அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசித்தனா்.
அதேபோல, பலப்பட்டரை மாரியம்மன், சின்னமுதலைப்பட்டி அம்மச்சி அம்மனுக்கும் விசேஷ அலங்காரங்கள் நடைபெற்றன. மோகனூா் சுப்பிரமணியபுரத்தில் உள்ள துா்க்கை அம்மன் கோயிலில் ஆடிமாத இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் சுமங்கலி பெண்கள் பலா் கலந்துகொண்டனா். அனைவருக்கும் அம்மனுக்கு சாத்துபடி செய்த வளையல்கள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் பக்தா்கள் மஞ்சள் அடை அணிந்து வேப்பிலையுடன் கூடிய தீா்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா். ஆடிவெள்ளியையொட்டி பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
என்கே-25-அம்மன்-1
ஆடிமாத 2-ஆவது வெள்ளியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் சிங்கிலிப்பட்டி பிடாரி காளியம்மன்.
என்கே-25-அம்மன்-2-
சிறப்பு தங்கக்கவச அலங்காரத்தில் மோகனூா் சுப்பிரமணியபுரம் துா்க்கை அம்மன்.
படம்-3
அம்மனுக்கு சாத்துப்படி செய்த வளையல்களை பெற்ற பெண்கள்.

