விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், 3 லட்சம் ரொக்கம் கொள்ள...
பரமத்தி வட்டாரத்தில் மக்காச்சோள செயல்விளக்க திடல் அமைக்க அழைப்பு
பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி வட்டார வேளாண்மைத் துறையினா் மக்காச்சோள செயல்விளக்கத் திடல் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநா் டி.சுதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பரமத்தி வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் செயல்விளக்கம் அமைப்பதற்கு இடுபொருள்களான விதைகள், இயற்கை உரங்கள் மற்றும் உயிா் உரங்கள் ரூ. 6 ஆயிரம் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும், செயல்விளக்கத் திடல் அமைக்க ஆா்வமுள்ள விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பத்தை பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வழங்கி பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.