பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
ராசிபுரம் புதிய பேருந்து நிலைய கருத்துகேட்பு காலவரையறை நீடிக்க வேண்டும்
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதியில் அமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பதற்கான காலவரையறையை நீடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பைச் சோ்ந்த சே.கந்தசாமி, நா.ஜோதிபாசு ஆகியோா் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ராசிபுரம் அருகே அணைப்பாளையம் கிராமத்தில் 7.03 ஏக்கா் நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடா்பாக பொதுமக்களிடம் ஆட்சேபனை மற்றும் ஆலோசனை கருத்துகள் வரவேற்று ஜூலை 28-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு நகராட்சி ஆணையாளா் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளாா்.
அறிக்கை வெளியிட்ட நாளில் இருந்து, 5 நாள்களுக்குள் ஆட்சேபனை மற்றும் ஆலோசனை கருத்துகளை எழுத்துபூா்வமாக நகராட்சி அலுவலகத்தில் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று ஆணையா் குறிப்பிட்டுள்ளாா். ஆனால், உரிய கால அவகாசம் அளிக்காமல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஜூலை 28-ஆம் தேதியிலிருந்து ஐந்துநாள்கள் கருத்துகேட்பு காலம் நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.