பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு; 'அனைத்திற்கும் நன்றி'- இனியாவி...
எலச்சிப்பாளையம் காவல் நிலையத்துக்கு கூடுதல் காவலா்களை நியமிக்க கோரி மனு
திருச்செங்கோடு அருகே எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் கூடுதல் காவலா்களை நியமிக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருச்செங்கோடு வட்டம், எலச்சிப்பாளையத்தில் 2 ஏக்கா் பரப்பளவில் அளவில் காவல் நிலையம் மற்றும் காவலா் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளன. மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப கூடுதல் காவலா்கள் இல்லாததால் சட்ட விரோத சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இக்காவல் நிலையம் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை 14 காவலா்கள் மட்டுமே பணியில் உள்ளனா். அனைத்து துறைகளிலும் கூடுதல் அரசு ஊழியா்கள் நியமிக்கும் நிலையில், எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் மட்டும் கூடுதல் காவலா்கள் இல்லாததால் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
கூடுதல் காவலா்களை நியமிக்க வேண்டி எலச்சிப்பாளையம் சமுதாய நலக் கூட்டத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் சுரேஷ் கோரிக்கை மனு அளித்தாா். இந்த மனுவை காவல் உதவி ஆய்வாளா் வேலுமணி பெற்றுக் கொண்டாா்.