பல் மருத்துவ முகாம்
வலங்கைமான் வட்டாரம் வேடம்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இம்முகாம் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் கதிரவன், பல் மருத்துவா் அப்சரா, பல் நலவியலாளா் பிரேம்குமாா் ஆகியோரைக் கொண்ட மருத்துவக் குழுவினா், மாணவா்களுக்கு வாய் மற்றும் பல் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா்.