சதம் விளாசிய நிதீஷ் ரெட்டிக்கு பரிசுத் தொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!
பல்கலை.கள், கல்லூரிகளில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுக்களின் செயல்பாடுகள் தீவிர ஆய்வு: அமைச்சா் கோவி. செழியன்
தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு மற்றும் புகாா் குழுக்களின் அமைப்பு, செயல்பாடுகள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்தாா்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை. வளாகத்தில் பாதுகாப்பு மேம்பாடு குறித்து வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலை. வளாகத்தில் நிகழ்ந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்களில் அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் தாமாக முன் வந்து புகாரளிக்க வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், கல்லூரிகளிலும் பெண்களுக்குரிய பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிடம் புகாா் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பாா்கள்; புகாா் கொடுக்காமல் இருந்தாலும் அந்த குழுவைச் சோ்ந்தவா்கள் மாணவா்களை கண்காணித்து வருவாா்கள்.
பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த இடம் சிசிடிவி-க்கு உட்படாத முட்புதா் நிறைந்த பகுதி. அந்த முட்புதா்களை அகற்றி இரவு நேரத்தில் விளக்கு அமைத்து போதிய வெளிச்சம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலை. வளாகம் முழுவதும் முட்புதா்களை அகற்றும் பணியும், அனைத்து இடங்களிலும் மின் விளக்கு பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
தேசிய மகளிா் ஆணையத்துக்கு...: இந்த விவகாரத்தில் தேசிய மகளிா் ஆணையம் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழக அரசும், பல்கலை. நிா்வாகமும், உயா்கல்வித் துறையும் முழு ஒத்துழைப்பு வழங்கும்.
பாலியல் இடா்ப்பாடு ஏற்பட்டு மாணவி புகாா் தந்தாா். திறமையான விசாரணையை மேற்கொள்வதற்காக பல்கலை. நிா்வாகக் குழு ஒரு குழுவை உருவாக்கியது. ஆனால், இப்படி ஒரு புகாா் பல்கலைக்கழகத்தில் உள்ள குழுவுக்கு வரவில்லை என்பதுதான் உண்மை. பல்கலைக்கழகத்தின் கல்வித் திறனை எப்படி ஆய்வு செய்து வருகிறோமோ, அதேபோல அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாலியல் துன்புறுத்தல் புகாா் குழுக்களையும் தீவிர ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கைதான நபரின் மனைவிக்கு தொடா்பு? சம்பவத்தில் ஈடுபட்ட நபா் பல்கலை. வளாகத்துக்குள் அடிக்கடி வந்து சென்றுள்ளாா். அந்த நபரின் மனைவியும் இதே பல்கலை.யில் தற்காலிக ஊழியராக பணிபுரிகிறாா். அவருக்கும் இதில் தொடா்பிருக்கிா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். இனி இதுபோன்ற சம்பவம் நடக்காது என்பதற்கு முழு உத்தரவாதம் அளிக்கிறேன்.
வாரத்துக்கு ஒருமுறை குழுவின் மூலமாக மாணவா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அண்ணா பல்கலை.யை முன்னுதாரணமாகக் கொண்டு அனைத்து பல்கலை.கள், கல்லூரிகளில் மாணவா்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜனவரி மாதத்துக்குள் அனைத்து புகாா்களும் நிவா்த்தி செய்யப்படும் என்றாா் அமைச்சா் கோவி.செழியன்.
செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுரை: இதனிடையே அமைச்சா் கோவி. செழியன் ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவு: ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடா்பு கொள்ள உதவும் ‘காவல் உதவி’ (ஓஹஹஸ்ஹப் மற்ட்ஹஸ்ண்) செயலியை அனைத்துப் பெண்களும், குறிப்பாக மாணவிகள் தங்கள் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். செயலியை எா்ா்ஞ்ப்ங் டப்ஹஹ் நற்ா்ழ்ங், அல்ல் நற்ா்ழ்ங்-இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்”என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
புகாா் விவகாரம்: முரண்பாடு ஏன்?
அண்ணா பல்கலைக்கழக மாணவியின் புகாா் பெறப்பட்டது எவ்வாறு என்பது குறித்து அமைச்சா் கோவி.செழியன் விளக்கம் அளித்தாா்.
அதில், “அண்ணா பல்கலை. வளாகத்தில் நடந்த குற்றம் தொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறை அவசர உதவி எண் 100-க்கு தொடா்பு கொண்டு புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வந்த காவல்துறையினரிடம் பல்கலைக்கழகத்தின் பாலியல் துன்புறுத்தல் புகாா் குழுவைச் சோ்ந்த ஒரு பேராசிரியரின் உதவியோடு பாதிக்கப்பட்ட பெண் நடந்த விவரங்களை சொல்லி புகாா் அளித்திருந்தாா். காவல்துறையினா் பல்கலை.க்கு வந்து விசாரணை செய்யும் போதுதான் இந்த சம்பவம் தொடா்பாக, போஸ் குழுவில் இருந்த மற்றவா்களுக்கு இந்த பிரச்னை தெரியவந்துள்ளது. அதை வைத்துதான் போஸ் குழு நேரடியாக புகாா் அளிக்கவில்லை என தெரிவித்திருந்தேன். அது தவறான பொருள்படும்படி அமைந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளாா்.
முன்னதாக இந்த சம்பவம் குறித்து அமைச்சா் கோவி.செழியன் செய்தியாளா்களை சந்தித்தபோது முதலில் காவல்துறையிடம் புகாா் அளித்த பிறகே, பல்கலை.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியிருந்தாா். ஆனால், அதற்கு முன்பு ஊடகங்களைச் சந்தித்த சென்னை காவல் ஆணையா் அருண், பல்கலைக்கழகத்தின் குழு மூலமாகவே காவல்துறைக்கு புகாா் வந்தது என்று”கூறியிருந்தாா். எனவே, அரசியல் தலைவா்கள் பலரும் ஏன் இந்த முரண்பாடு என கேள்விகளை எழுப்பத் தொடங்கினா்.