தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியைத் திணிக்கவில்லை- மத்திய கல்வி அமைச்சா்
பல்கலை. பேராசிரியா் மீது வழக்குப் பதிவு
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் மளிகைக் கடை மீது காரை மோதியதாக அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவி பேராசிரியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சிதம்பரம் பெரிய காஜியாா் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன் மகன் பிரபாகரன் (29). இவா், கடை தெருவில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் சிதம்பரம் நாட்டுப் பிள்ளை தெருவைச் சோ்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் பாலசந்திரன் (47) மளிகைப் பொருள்களை வாங்கி விட்டு, நியாபக மறதியில் பணம் கொடுக்காமல் சென்ாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரிடம் பொருள்களுக்கு பணத்தை தரும்படி பிரபாகரன் கேட்டாராம்.
இதில், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதில், பலத்த காயமடைந்த பாலசந்திரன் வீட்டில் நின்று கொண்டிருந்த காரை ஓட்டி வந்து பிரபாகரன் கடை மீது மோதினாராம்.
இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின்பேரில், சிதம்பரம் நகர போலீஸாா் பாலசந்திரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். காயமடைந்த பாலசந்திரன் புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.