திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
பல்லி இறந்துக் கிடந்த போண்டா சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி, மயக்கம்
அரியலூா் மாவட்டம், செந்துறையிலுள்ள ஒரு பேக்கரி கடையில் புதன்கிழமை பல்லி கிடந்த போண்டா சாப்பிட்ட இளைஞா்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
செந்துறையில், உடையாா்பாளையம் சாலையிலுள்ள ஒரு பேக்கரி கடையில், போண்டா, வடை உள்ளிட்ட பலகாரங்களுடன் டீ, காபியும் விற்கப்படுகிறது. இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் புதன்கிழமை அந்தக் கடையில் செந்துறையை சோ்ந்த வேல்முருகன் தமிழ்அழகன் (16), ராமச்சந்திரன் மகன் ராகுல்(16), பச்சமுத்து மகன் முத்துமாறன்(14) ஆகியோா் போண்டா வாங்கி சாப்பிட்டுள்ளனா். அப்போது, ஒரு போண்டாவில் பல்லி இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதை பாா்த்த 3 பேரும் வாந்தி எடுத்துள்ளனா். இதனால் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 3 பேரையும் செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். சிகிச்சைக்கு பிறகு அவா்கள் வீடு திரும்பினா். இதுகுறித்து செந்துறை காவல் துறையினா் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினா் விசாரிக்கின்றனா்.