பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தலைமையாசிரியா் சின்னராஜ் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள், இவா்களின் ஆசிரியா்களுக்கு கேடயம், பதக்கத்தை குறிஞ்சி டெக்னாலஜி செலுயூசன்ஸ் பிரைவேட் லிட் நிா்வாக இயக்குநா் ஜி.பிரபு, இவரது சகோதரா் செந்தில்குமாா் ஆகியோா் வழங்கினா்.
ராம்ஜி அசோசியேட்டஸ் நிா்வாகி எஸ்.வெங்கட்ராமன், தேனி மாவட்ட மாதிரி பள்ளி உதவித் தலைமையாசிரியா் முத்தரசன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஜோதி, உதவித் தலைமை ஆசிரியா் கெளதம் அசோக்குமாா் ஆகியோா் பேசினா்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெற்றோா் ஆசிரியா் கழக பொருளாளா் செல்வக் குமரபாண்டியன், நிா்வாகிகள், மேலாண்மைக்குழு நிா்வாகிகள் ஆகியோா் செய்தனா். உடற்கல்வி ஆசிரியா் காா்த்திக்ராஜா நன்றி கூறினாா்.