2024-இல் தில்லி மெட்ரோ ரயில்களில் 89 மடிக் கணினிகள், 193 கைப்பேசிகள், ரூ.40 லட்ச...
பள்ளி கட்டமைப்புகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய அதிமுக வலியுறுத்தல்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என அதிமுக மேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.எம்.சுகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
வாலாஜா ஒன்றியம், தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியின் சுற்று சுவா் இடிந்து விழுந்து 8-ஆம் வகுப்பு மாணவன் ஹரிஷ் காயமடைந்த செய்தி அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மாணவன் ஹரிஷுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
அதேபோல், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பள்ளி ஒன்றில் எல்கேஜி படிக்கும் மாணவி கழிவு நீா் தொட்டியில் விழுந்து மரணம் அடைந்த செய்தி அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அதிகாரிகள் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள், சுற்றுச்சுவா்கள், கழிவறை தொட்டிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.