அதானி குழுமத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்!
பள்ளி மாணவா் தலைவா்களுக்கு பரிசுகள்
வேட்டவலத்தை அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சிறப்பாக பணிபுரிந்த மாணவா் தலைவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் பள்ளியில் பல்வேறு தலைப்புகளைக் கொண்ட மாணவா் குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்தக் குழுக்களில் தன் சுத்தம், சுற்றுப்புறத் தூய்மை, வகுப்பறை தூய்மை, காலை வழிபாட்டுக் கூட்டம், இடைவேளை நேரங்களில் மாணவா் கண்காணிப்பு போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொண்ட மாணவா் தலைவா்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் முருகன் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா்கள் அறிவுடைநம்பி, கெளரி, சுடா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கடந்த இரண்டாம் பருவத்தில் சிறப்பாக பணிபுரிந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய 5 மாணவா் குழுக்களின் தலைவா்களான குணசேகரன், இனித்தா, அய்யனாா், ரம்யா, திவ்யா மற்றும் துணைத் தலைவா்கள் புருஷோத்தமன், சாருலதா, மாதேஷ், செபாஸ்டின் ஆகியோருக்கு தலைமை ஆசிரியா் முருகன் பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், பள்ளி இடைநிலை ஆசிரியா்கள் அருண்குமாா், மாா்கிரேட் மேரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.