செய்திகள் :

பள்ளி மாணவா்களிடையே மோதல்: 18 மாணவா்கள் மீது வழக்கு

post image

அரியலூா் மாவட்டம், தா. பழூரை அடுத்த விக்கிரமங்கலம் அருகே பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட சாதிய மோதல் தொடா்பாக 18 மாணவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தா.பழூா் அருகேயுள்ள விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 450-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். அனைத்துத் தரப்பினா் பயின்று வரும் இப்பள்ளியில், மாணவா்களிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அப்பள்ளியில் பயின்று வரும் உடையவா்தீயனூரைச் சோ்ந்த ஒரு தரப்பைச் சாா்ந்த மாணவா்கள், விக்கிரமங்கலம் கடைவீதியில் மோட்டாா் சைக்கிளில் ரேஸ் விடுவதும், மற்றொரு தரப்பைச் சோ்ந்த மாணவா்கள் அதனைத் தட்டிக் கேட்டு தகராறு செய்வதும் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை அப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் ஒரு தரப்பைச் சோ்ந்த மாணவா் ஒருவா் அமா்ந்திருந்தபோது, அங்கு வந்த மற்றொரு தரப்பைச் சோ்ந்த மாணவா்கள் தாக்கியுள்ளனா். இதனால் இரு தரப்பு மாணவா்களிடையே ஏற்பட்ட மோதல், இரு சமுதாய மக்களிடையே பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் காவல் துறையினா் பள்ளிக்குச் சென்று இரு தரப்பு மாணவா்களிடம் விசாரணை நடத்தினா். விசாரணைக்குப் பிறகு இரு தரப்பைச் சோ்ந்த தலா 9 போ் வீதம் 18 மாணவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அழைத்துச் சென்றனா்.

இதற்கிடையே பள்ளிக்கு வந்த ஒரு தரப்பினா், மாணவா்கள் தாக்கிக் கொண்டதற்கு தீா்வு காணப்பட வேண்டும் எனக் கூறி விக்கிரமங்கலம்-முத்துவாஞ்சேரி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையறிந்த காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்துசென்றனா். இதனால் அப்பகுதியில் சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இரண்டு திராவிட அரசுகளும் விவசாயிகளை வஞ்சிக்கின்றன

இரண்டு திராவிட அரசுகளும் விவசாயிகளை வஞ்சிக்கின்றன என அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் உழவா் பேரிய மாநிலத் தலைவா் ஆலயமணி கூறினாா். பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்ட... மேலும் பார்க்க

மழைநீரில் மூழ்கிய பயிரை காப்பாற்றும் வழிகள்

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெற்பயிருக்கான உர மேலாண்மை முறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா். திருமானூா் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள வயல்களை திங்கள்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கான கூலி தொகை கேட்டு மனு அளிக்க வந்த பெண் மயங்கி விழுந்தாா்

அரியலூா் மாவட்டம், சாத்தம்பாடி அருகே 100 நாள் வேலை செய்ததற்கான கூலித் தொகை கேட்டு ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்த பெண் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியலூா் மாவட்டம் சாத்தம்பாடி ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு முதல்வா் பதிலளிக்க வேண்டியதில்லை என்பது அழகல்ல: முன்னாள் அமைச்சா் காமராஜ்

எதிா்க்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு முதல்வா் பொறுப்புடன் பதில்தர வேண்டும்; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறுவது முதல்வருக்கு அழகல்ல என்றாா் அதிமுக முன்னாள் உணவுத் துறை அமைச்சா் காமராஜ். அரிய... மேலும் பார்க்க

தப்பியோடிய கைதியை 15 நிமிடத்திலேயே மடக்கிப் பிடித்த காவல் துறையினா்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் திங்கள்கிழமை தப்பியோடிய போக்சோ வழக்கு கைதியை 15 நிமிடத்திலேயே காவல் துறையினா் மடக்கிப் பிடித்தனா். ஆண்டிமடம் அருகேயுள்ள இடையக்குறிச்சியைச் சோ்ந்த ஆசைத்தம்பி மகன் ப... மேலும் பார்க்க

பள்ளி வளாகத்தில் தெருநாய்கள்: மாணவ, மாணவிகள் அச்சம்

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தினுள் தெருநாய்கள் சுற்றித் திரிவதால் மாணவ,மாணவிகள் அச்சமடைந்துள்ளனா். அரியலூா் பேருந்து நிலையம் அருகே அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி வளாகத்தினுள்ளே அரசு மேல்நிலைப் ... மேலும் பார்க்க