உசிலம்பட்டி: ஒச்சாண்டம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடந்த மாசிப் பெட்டி எடுப்பு ...
பள்ளி மாணவா்களின் அறிவியல் கண்காட்சி
கொடைக்கானல் இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில், பள்ளி மாணவா்களின் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அறிவியல் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானல் அப்சா்வேட்டரியிலுள்ள இந்த மையத்தில், மாணவ, மாணவிகளின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள், அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதில் கொடைக்கானல் வட்டாரத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 350 மாணவா்கள் கலந்து கொண்டனா்.
இந்தக் கண்காட்சியில், மாணவ, மாணவிகள் மின்சார சிக்கனம், சாலைப் பாதுகாப்பு, இயற்கை குளிா்சாதனப் பெட்டி, சூரிய குடும்பங்கள், இயற்கை வளங்கள், மழைநீா் சேகரிப்பு, சாலை விபத்து தடுப்பு, சாலைகளில் வன விலங்குகள் நடமாட்டத்தை கண்டறிவது உள்ளிட்ட பல வகையான அறிவியல் பொருள்கள் வைக்கப்பட்டன.
மேலும், மாணவா்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன . இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி மையப் பொறுப்பாளா் ராஜலிங்கம் பரிசு வழங்கினாா்.
இதில், இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி மைய அருங்காட்சியகப் பொறுப்பாளா் கிறிஸ்பின் காா்த்திக், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.