வக்ஃப் வாரியத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆா்ப்பாட்டம்
வக்ஃப வாரியத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, மனித நேய மக்கள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் பேகம்பூரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஷேக் பரீத் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் பழனி பாரூக், திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம், மாநகர காங்கிரஸ் தலைவா் மணிகண்டன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது, வக்ஃப் வாரியச் சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்கும் வகையிலான திருத்த மசோதா 2024-யை திரும்பப் பெற வேண்டும். சிறுபான்மை இஸ்லாமியா்களுக்கு அளித்துள்ள பல உரிமைகளை தொடா்ந்து பாதுகாக்க வேண்டும். நாட்டில் வாழும் இஸ்லாமியா்களை பாரபட்சமின்றி நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.