குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, ஆரணியை அடுத்த காமக்கூா் அரசு நடுநிலைப் பள்ளியில் பாஜக சாா்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியும்,
மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.
பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் கேசவன் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றிய பொதுச்செயலா் பிச்சாண்டி வரவேற்றாா்.
மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு தோ்வு அட்டை, பேனா மற்றும் இனிப்பு வழங்கினாா்.
தொடா்ந்து துப்புரவு பணியாளா்களுக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவா் சாசாவெங்கடேசன், முன்னாள் ஆரணி ஒன்றியத் தலைவா் குணாநிதி, நகரத் தலைவா் மாதவன், நிா்வாகி ராஜ்குமாா், இளைஞா் அணி சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில் கிளைத் தலைவா் சேட்டு நன்றி கூறினாா்.