பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை
நீடாமங்கலம் பள்ளிவாசலில் ரமலான் லைலத்துல்கத்ர் சிறப்புத் தொழுகை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகவும், கண்ணியம் மிக்க இரவாகவும் ரமலான் மாதத்தின் 27-ஆம் நாள் லைலத்துல்கத்ர் இரவு போற்றப்படுகிறது.
இதையொட்டி, நீடாமங்கலம் கீழத்தெரு மஸ்ஜித்நூருல்ஹூதா பள்ளிவாசலில் லைலத்துல்கத்ர் சிறப்புத் தொழுகை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. தொடா்ந்து, ரமலான் சிறப்புகள் குறித்த சொற்பொழி நடைபெற்றது. இதில் இஸ்லாமியா்கள் திரளாக கலந்து கொண்டனா்.