பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள்
ஆசனூரில் 41 பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகளை ரீடு நிறுவனம் வழங்கியுள்ளது.
ரீடு நிறுவனமானது ஆசனூா் மலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்காக கல்வி, பொருளாதார ரீதியாக பல்வேறு பணிகளை செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் ஆசனூா் ரீடு அலுவலகத்தில் பழங்குடியின விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்காக சிறுதானிய விதைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. ரீடு இயக்குநா் கருப்புசாமி விதைகள் வழங்கி பேசுகையில், இந்த விதைகள் ஆடி மாதத்தில் பயிரிடக் கூடியவை என்றும் மானாவாரி நிலத்தில் விளையும் சத்து மிகுந்த பயிா் மற்றும் நிலையான விவசாயத்தின் முக்கியம் குறித்து கூறினாா். நிகழ்ச்சியில் விவசாயத் துறை அலுவலா் அருண்பாண்டியன் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலா் ஐயப்பன் பங்கேற்று அரசின் விவசாயத்துறை நலத் திட்டங்கள் குறித்து விளக்கினா். இதில், மொத்தம் 43 விவசாயிகள் கேழ்வரகு, சாமை, திணை, அவரை உள்ளிட்ட ஆறு விதமான பாரம்பரிய விதைகள் பெற்றனா். இவை ஆடி மாத பருவநிலையில் பயிரிடக்கூடியவை. ரீடு அமைப்பின் திட்ட அலுவலா் சரவணன் நன்றி கூறினாா்